காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்தை தனது வீட்டிற்கு வரவழைத்து பாராட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்.
அண்மையில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் நடந்த பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றார்.
உலக அளவில் நடந்த போட்டியில் தங்கம் வென்ற தமிழரான சதீஷுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சிவலிங்கத்தை தனது வீட்டிற்கு வரவழைத்து பரிசு கொடுத்து பாராட்டியுள்ளார்.
சிவகார்த்திகேயனை சந்தித்து பேசியதை சதீஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அருமையான நபர். காமன்வெல்த் பதக்கத்துடன் அவரை சந்தித்தேன். அவரின் வார்த்தைகள் ஊக்கம் அளித்தது. கடின உழைப்பால் முன்னேறிய சிவகார்த்திகேயனை பார்த்து வியப்பதாகவும், பரிசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் சதீஷ்.

Actor Sivakarthikeyan invited Common Wealth Games CWG gold medalist Sathish Sivalingam to his home and appreciated him by giving a lovely gift.

#sivakarthikeyan #sathishsivalingam #goldmedal