டி.ஆர்.பி.க்காக பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதா என்று கூறி பிக்கப் டிராப் நடிகர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளாராம்.
பிக்கப் டிராப் நடிகருக்கு பெண் தேடுவதாகக் கூறி தமிழுக்கு புதிதாக வந்த தொலைக்காட்சி சேனல் ஒன்று நிகழ்ச்சியை நடத்தியது. 16 பெண்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் நடிகர் யாரையும் தேர்வு செய்யவில்லை.
இந்நிலையில் நடிகருக்கும், சேனலுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவரின் தந்தை டிவி சேனல் மற்றும் நடிகர் மீது போலீசில் புகார் அளித்துள்ளாராம். சேனல் வளர்ச்சிக்காக பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடியுள்ளதாக அவர் புகார் அளித்துள்ளாராம்.
புதிதாக துவங்கப்பட்ட அந்த சேனல் பெண் தேடும் நிகழ்ச்சியால் மட்டும் தமிழகத்தில் 5வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் வளர்ச்சி பெற பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடிவிட்டாராகள் என்று அந்த போட்டியாளரின் தந்தை ஆதாரத்துடன் புகார் தெரிவித்துள்ளாராம்.
பெண் தேடிய நிகழ்ச்சியை ஒரு வாரத்தில் 10 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்களாம். தமிழகத்தில் வந்த வேகத்தில் வளர இந்த நிகழ்ச்சியை பயன்படுத்திவிட்டார்கள் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
போட்டியாளரின் தந்தை அளித்த புகாரால் நடிகர் மற்றும் டிவி சேனல் கலக்கத்தில் உள்ளதாம். நிகழ்ச்சியில் காட்டப்பட்ட பல விஷயங்கள் போலியானவை என சினிமா பிரபலங்கள் சிலரும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

According to reports, father of a contestant of the recently concluded TV reality show has given a complaint in the police station against the channel and the actor.

#arya #engaveettumapillai #policecomplaint #colorstv