விஜய்க்காக தலைவா 2 படத்தின் கதையை தயார் செய்து வைத்துவிட்டு அவருக்காக காத்திருப்பதாக இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தலைவா படம் பெரும் பிரச்சனைக்கு பிறகே ரிலீஸானது. தலைவா Time to Lead என்ற வார்த்தையால் வந்தது வினை.
படத்தை ரிலீஸ் செய்வதற்குள் விஜய் படாதபாடு பட்டதை யாரும் மறக்க முடியாது.
விஜய்யை வைத்து தலைவா 2 படத்தை எடுக்கும் ஐடியாவில் உள்ளார் இயக்குனர் விஜய். இது தளபதிக்கும் தெரியுமாம். தலைவா 2 படத்தின் கதையை தயார் செய்துவிட்டார் இயக்குனர்.
விஜய் மட்டும் ஓகே சொல்லிவிட்டால் படப்பிடிப்பை உடனே துவங்கிவிட வேண்டியது தான் என்கிறார் இயக்குனர். தலைவா போன்று தலைவா 2 படத்திற்கு பிரச்சனை வராது என்று முன்னதாக தலைவா பட ரிலீஸுக்கு பிரச்சனை ஏற்பட்டபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச விஜய் அனுமதி கேட்டார். கொடநாட்டில் இருந்த ஜெயலலிதா அனுமதி அளிக்காததால் விஜய்யும், அவரது தந்தையும் அதிர்ச்சி அடைந்தனர்.
பெரும் பிரச்சனையை சந்தித்த விஸ்ரூபம் படத்தின் 2 பாகம் தயாராகியுள்ளது. விஸ்வரூபம் பிரச்சனையின்போது நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கமல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director AL Vijay said in an interview that he has prepared the story for Thalaivaa 2 and waiting for Vijay to say YES to commence the shoot.

#vijay #newmovie #thalaivaa2 #vijay62 #vijay63 #vijay64