பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி கழுத்தில் மனுக்களை மாலையாக அணிந்து கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் படுத்து விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி குறைதீர்ப்பு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது பையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவ பிரகாசம் என்ற விவசாயி உள்ளே வந்தார். அப்போது அவர் தனது கழுத்தில் மனுக்களை மாலையாக அணிந்து கொண்டு வந்தார். பின்னர் அவர் தரையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சிவபிர காசத்தை அப்புற படுத்தினர்.

des : The farmers fought for the harvesting of the crop insurance and wearing the petals on the floor of the Collectorate office and faced the struggle.