ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ படமான 'அவென்ஜர்ஸ் - இன்ஃபினிட்டி வார்' கடந்த வெள்ளிக்கிழமை உலகம்

முழுவதும் வெளியானது. அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே இந்தப் படம் உலகம் முழுவதும்

ரசிகர்களைக் கவர்ந்து வசூலை அள்ளி வருகிறது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களிலும் இந்தப் படத்தஇப் பார்க்க திரையரங்குகளுக்கு சிறுவர்கள்

முதல் பெரியவர்கள் வரை ரசிகர் பட்டாளம் குவிந்து வருகிறார்கள். தற்போது மல்டிஃபிளக்ஸ் தியேட்டர்களில்

இருக்கும் கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தப் படத்தைப் பார்க்க வருபவர்கள் தான்.
பிரபஞ்சத்தை அழிக்க இன்ஃபினிட்டி ஸ்டோன்ஸ் எனப்படும் மந்திரக்கற்களை அடைய வரும் தானோஸ் என்ற

வில்லனை, கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், ஹல்க், தோர் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்கள்

பட்டாளமே திரண்டு தடுக்கப் போராடும் இப்படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் செமத்தியான

வரவேற்பு கிடைத்துள்ளது.

அவென்ஜர்ஸ் திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் 250 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இது இந்திய

மதிப்பில் தோராயமாக 1660 கோடி ரூபாய். இதற்கு முன்பு அங்கு ஸ்டார் வார்ஸ் படம் வீக்கெண்டில் 248

மில்லியன் வசூல் செய்ததே சாதனையாக இருந்தது. டிஸ்னி நிறுவனம் தான் அதையும் தயாரித்தது. அந்தச்

சாதனையைத் தகர்த்தெறிந்துள்ளது இன்ஃபினிட்டி வார்ஸ்.

இந்தியாவில் இன்ஃபினிட்டி வார் திரைப்படம் ரிலீஸான வெள்ளிக்கிழமை அன்று 40 கோடி ரூபாயும்,

சனிக்கிழமை 39 கோடி ரூபாயும், ஞாயிறு விடுமுறை நாளில் ரூபாய் 44 கோடி வசூல் என வார இறுதி

நாட்களில் மட்டுமே ரூபாய் 123 கோடிக்கும் மேல் வசூல் செய்து அதிர வைத்துள்ளது.
இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களில் இந்தியாவில் இவ்வளவு பெரிய ஓப்பனிங் வசூல் கிடைத்த படம்

இதுதான் என டிஸ்னி நிறுவனம் கூறியுள்ளது. கிட்டத்தட்ட எல்லா திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல்

காட்சிகளாக ஓடி வருகிறது இந்த சூப்பர் ஹீரோ படம்.

சென்னையில் முதல் நாளில் ரூபாய் 78 லட்சம் வசூல் செய்துள்ளது இன்ஃபினிட்டி வார்ஸ் திரைப்படம். இந்த

ஆண்டில் அதிக ஓப்பனிங் டே வசூல் எடுத்த படமான 'தானா சேர்ந்த கூட்டம்' வசூலை முந்தியுள்ளது இந்தப்

படம். இந்த நான்கு மாதங்களில் சென்னையில் அதிக வசூல் பெற்ற படங்களில் முதலிடத்தில் இருக்கிறது

'இன்ஃபினிட்டி வார்ஸ் - அவென்ஜர்ஸ்'.

Hollywood's superhero film 'Avengers - Infinity War' was released worldwide last

Friday. As everyone has expected, the film is gaining huge collection worldwide.

Avengers infinity war box office colelction in india, usa and worldwide.

#avengers #infinitywar #boxoffice #review