Surprise Me!

மோடியை தாக்கும் பிரகாஷ் ராஜின் கெத்து பேட்டி! - வீடியோ

2018-05-04 1 Dailymotion

மோடி பற்றி பேசியதில் இருந்து தனக்கு பாலிவுட் பட உலகில் வாய்ப்பு போய்விட்டது என்று நடிகர்

பிரகாஷ்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.

மோடி பெரிய ராட்சசன், அவரையும், பாஜகவையும் ஆட்சியைவிட்டு, இந்தியாவிட்டு அகற்றுவதே

தன்னுடைய குறிக்கோள் என்றுள்ளார். பிரகாஷ் ராஜின் நண்பரும், பத்திரிக்கையாளருமான கவுரி

லங்கேஷ் இந்துத்துவா தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். இவரை கொன்ற கொலையாளி இப்போது

கொலையை ஒப்புக்கொண்டுள்ளார். மோடி பற்றியும், ஆர்.எஸ்.எஸ் பற்றியும் பேசியதால் கவுரி

கொல்லப்பட்டார். அவர் மரணத்தில் இருந்து அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் பிரகாஷ்ராஜ்

தற்போது மிக முக்கியமான பேட்டி ஒன்றை பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ளார்.

பாஜகவிற்கு எதிராக கர்நாடகாவில் பிரச்சாரம் செய்யும் அவர் பிரச்சாரத்திற்கு இடையில் பேட்டி

அளித்துள்ளார். கவுரி மரணம் குறித்து பேசிய அவர் ''ஆம் கவுரி மரணம் என்னை மாற்றியது.

மாற்றியது என்பதைவிட என்னை உலுக்கியது. அவள் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தாள். அவளின்

குரல் அடங்கிய போது, நான் குற்றவுணர்ச்சியுடன் உணர்ந்தேன். நாம் அவரை தனியாக போராட

வைத்துவிட்டோம். இப்போது நான் பேச ஆரம்பித்துள்ளேன். என் குரலை இப்போது நிறுத்த

பார்க்கிறார்கள். இதை செய்வது வேறு யாரும் இல்லை.. பாஜக மட்டும்தான்'' என்று வெளிப்படையாக

கூறியுள்ளார். மேலும் ''மோடியிடம் நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்ன ஆகிவிட்டது என்று கேட்டால்,

உடனே அவர் நேருவை பற்றி பேசுகிறார், திப்பு சுல்தான் பற்றி பேசுகிறார், 100 வருடங்களுக்கு முன்பு

நடந்ததை பேசுகிறார், இந்த 4 வருடம் என்ன நடந்தது என்று பேசுவது இல்லை. நான் ஏன் என் தாத்தா

காலத்தில் நடந்ததை வைத்து இவருக்கு ஓட்டு போட வேண்டும். மோடி எவ்வளவு பேசினார், ஆனால்

என்ன செய்தார்'' என்றுள்ளார்.

I am not getting any chances in Bollywood after I took my stand against Modi

says, Prakash Raj. Its ok not to get chance in cinema, I am getting enough

chance in South India. I will continue my politics against Modi till he

loses his side.

#prakashraj #modi #interview

Buy Now on CodeCanyon