நடிகர் விஷாலின் கசின் பார்கவ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலின் கசின் பார்கவ் தற்கொலை செய்து

கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த விஷால் மனமுடைந்து கண்ணீர் சிந்தியுள்ளார்.
பார்கவ் இறந்த செய்தியை ட்விட்டர் மூலம் அனைவருக்கும் தெரிவித்துள்ளார் விஷால். இது குறித்து

விஷால் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,

பார்கவ். நீ உயிரை மாய்த்திருந்திருக்கக் கூடாது. என் சொந்த சகோதரனை இழந்துவிட்டேன். இந்த

குற்ற உணர்வில் இருந்து என்னால் வெளிவரவே முடியாது. நான் உன்னை மிஸ் பண்ணுகிறேன் என்பதை

ட்விட்டர் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். ஏன் இப்படி? உன் பிரச்சனைகளை நான் தீர்த்து

வைத்திருப்பேனே. இதை டைப் செய்யும்போதே அழுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பார்கவ் தற்கொலை செய்து கொண்ட செய்தி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.