நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் பெர்ணான்டஸ் மும்பையில் தங்கி இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது சல்மான் கானுடன் சேர்ந்து ரேஸ் 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சல்மானுடன் பைக்கில் சென்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
ரேஸ் 3 படக்குழுவினருக்கு சல்மான் கான் தனது வீட்டில் நேற்று இரவு பார்ட்டி கொடுத்தார். விடிய விடிய நடந்த பார்ட்டியில் ஜாக்குலின் பெர்ணான்டஸும் கலந்து கொண்டார்.
இரவு 2.20 மணி அளவில் ஜாக்குலின் சல்மான் கான் வீட்டில் இருந்து கிளம்பினார். 2.45 மணிக்கு அவர் சென்ற கார் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Bollywood actress Jacqueline Fernandez met with an accident in Mumbai when her car rammed into an autorickshaw in the wee hours today.

#heroine #car #accident #bollywood #salman khan