இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கடந்த 15-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். சந்தோஷ் நாராயணனுக்குப் பிறந்த நாள் பரிசாக கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்துள்ளார் நடிகர் விஜய்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'அட்டகத்தி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோருக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்து வருகிறார் சந்தோஷ் நாராயணன்.
விஜய்யின் 'பைரவா', ரஜினியின் 'கபாலி' மற்றும் 'காலா', பா.ரஞ்சித் தயாரித்துள்ள 'பரியேறும் பெருமாள்' உள்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணனின் இசையில் சமீபத்தில் வெளியான 'காலா' பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

Composer Santhosh Narayanan celebrated his birthday on May 15th. Actor Vijay gifted a Cricket bat to santhosh narayanan with his wishes.

#vijay #santhoshnarayanan #gift #thalapathy