விஷாலின் 'இரும்புத்திரை' படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார் அர்ஜூன். இந்தப் படத்தில் 'வொய்ட் டெவில்' எனும் கேரக்டரில் சைபர் க்ரைம் டானாக நடித்திருந்தார். அலட்டல் இல்லாமல் சைலண்ட் டெரர் நடிப்பை வெளிப்படுத்திய அர்ஜூனுக்கு தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் வருகின்றன.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் 'காளி' படம் வரும் மே 18-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் 'காசி' என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகிறது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை வெற்றிப்படமாக்க ப்ரொமோஷன் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இசையமைப்பாளராக கலக்கி நடிகராகியிருக்கும் விஜய் ஆண்டனி, 'காளி' படத்தையடுத்து 'திமிரு பிடிச்சவன்', 'கொலைகாரன்', 'திருடன்' ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும் 'மூடர்கூடம்' நவீன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

Arjun is the villain in Vishal's 'Irumbuthirai'. Next, Arjun is to act in the movie 'Kolaikaran' lead by Vijay Antony.

#arjun #villain #movies #video #whitedevil