கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் நடந்து கொண்டிருக்கிறது. பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், ஹூமா குரேஷி, மல்லிகா ஷெராவத், நடிகர் தனுஷ் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவில் லார்ஸ் வோன் ட்ரையர் இயக்கிய சீரியல் கில்லர் படமான தி ஹவுஸ் தட் ஜாக் பில்ட் திரையிடப்பட்டது.
திங்கட்கிழமை இரவு திரையிடப்பட்ட தி ஹவுஸ் தட் ஜாக் பில்ட் படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே 100 பிரபலங்கள் அரங்கில் இருந்து வெளியே சென்றுவிட்டனர்.
தொடர் கொலை செய்யும் ஜாக் என்ற கதாபாத்திரத்தில் மேட் தில்லன் நடித்துள்ளார். அவர் 2 குழந்தைகளின் தலையில் சுட்டுக் கொன்ற காட்சியை பார்த்ததுமே 100 பிரபலங்கள் அரங்கில் இருந்து நடையை கட்டிவிட்டனர்.
கடைசி காட்சி வரை இருந்து பார்த்துவிட்டு வந்தவர்களோ படம் அருமையாக உள்ளது. திறமையாக காட்சிப்படுத்தியுள்ளனர் என்று பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

100 people walk out of the theatre in the Cannes Film Festival that shows Lars von Trier's new serial killer movie, The House That Jack Built'.

#cannes #terror #movie #celebrities #walkout