அரசு அதிகாரிகளை பணம் கேட்டு மிரட்டிய 4 போலி நிருபர்களை கைது செய்த போலிசார் அவர்களிடம்

விசாரனை நடத்திவருகின்றனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் நிருபர்கள் என்று கூறி நுழைந்த 3 பேர்

அங்குள்ள அதிகாரிகளை பணம் கேட்டுள்ளனர். இதனை வீடியோ பதிவு செய்த அங்குள்ள

பணியாளர்கள் வேளாங்கண்ணி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு

வந்த போலீசார் சரவணன், கோபால கிருஷ்ணன், முத்துராஜ், பழனிவேல் ஆகிய 4 பேரையும் கைது

செய்தனர் காவலர்கள் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் நிருபர்கள் இல்லை என்பதும்

கடந்த 3 தினங்களாக நாகையில் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று மிரட்டி பணம்

பரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. வேளாங்கண்ணி பேரூராட்சி துணை செயல் அலுவலர் சுவாமிநாதன்

அளித்த புகாரின் பேரில், அரசு அதிகாரிகளை மிரட்டுவது, பணி செய்யவிடாமல் தடுத்தது போன்ற

பிரிவுகளின்கீழ் 4 நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த வேளாங்கண்ணி போலீசார் நீதிமன்றத்தில்

ஆஜர்படுத்தினர். மேலும், அவர்கள் பயன்படுத்திய பிரஸ் வில்லைகள் ஒட்டப்பட்ட காரையும் போலீசார்

பறிமுதல் செய்தனர்.