Surprise Me!

தெய்வ குத்தம் ஊட்டியில் அதிர்ச்சி- வீடியோ

2018-06-01 1,051 Dailymotion

பத்தாண்டுக்கு ஒரு முறை பூமியில் இருந்து கரும்பூகை வெளிவருவதால் கிராமத்தில் தெய்வக்குத்தம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ளத்தி கிராமத்தில் பழங்குடி தோடரின மக்கள் பல வருடங்களாக வசித்து வருகிறார்கள் அப்பகுதியில் அவர்களின் குடியிருப்பு பகுதி மற்றும் பாரம்பரிய கோவில் உள்ளது இதன் அருகேயுள்ள நீந்தி வனப்பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திடீரென பூமி பிளவு பட்டு கருப்பு நிறத்தில் மண் வெடித்து வெண்ணிறத்தில் புகை வெளியானது மேலும் அப்பகுதியில் உள்ள கற்பூர மரங்களும் கருகி வேறோடு சரிந்து விழுந்தது அப்போது புவியியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் எரி மலையோ வேறு காரணங்களோ இல்லை என்று பல வருடங்களுக்கு முன்பு மண்ணுக்கும் புதைந்த மரம் செடி கொடிகள் பூமி வெப்பத்தின் காரணமாக பூமிக்குள் எரிந்து அது புகையாக வெளியேறுகிறது என தெரிவித்தனர், அதன் பின் அது தாமாகவே நின்று விட்ட நிலையில் பத்தாண்டுகளுக்கு பின் மீண்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மீண்டும் பூமியில் இருந்து புகை வரத் தொடங்கியது பிறகு தானாகவே நின்று விட்ட நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் தற்போது அதே பகுதியில் கருப்பு மண் பிளந்து வெண்ணிறத்தில் புகை வரத்தொடங்கியுள்ளது இதனால் அப்பகுதியில் பூமி வெடித்து பள்ளங்கள் ஏற்பட்டு மரங்களும் பிடிப்பின்றி சாய்ந்து விழுந்த வண்ணம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன்உள்ளனர் தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் பூமிக்கடியிலிருது புகை வருவது மேலும் அச்சத்தை ஏற்படுதியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் மேலும் இந்த புகை வருவதற்கு காரணம் தெய்வக்குத்தம் என்றும் தெய்வ குத்ததை போக்க ஒரு சிலர் சாமியாரிடம் பரிகாரம் கேட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்

des : Villagers have panicked at the village of the goddess due to the fact that the drum from the earth once in a decade

Buy Now on CodeCanyon