Surprise Me!

13 கிலோ மனுக்களை தலையில் சுமந்து வந்த மூதாட்டி- வீடியோ

2018-06-05 1,433 Dailymotion

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்கள் கோரிக்கைகளுடன் அங்கு வந்திருந்தனர். அப்போது, குண்டுபிள்ளை என்னும் மூதாட்டி, 13 கிலோ எடை கொண்ட கோரிக்கை மனுக்களை தலையில் சுமந்தபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவைகள் அனைத்தும் 10 வருடங்களாக ஆட்சியர் அலுவலகத்துக்கு கொடுத்த கோரிக்கை மனுக்களின் நகல்களாகும். நேராக ஆட்சியரிடம் வந்த குண்டுபிள்ளை, அந்த மனு மூட்டை நகல்கள், மற்றும் புதிய மனுக்களையும் சேர்த்து ஆட்சியர் தண்டபாணியிடம் கொடுத்தார். <br />

Buy Now on CodeCanyon