கோவை-கேரளா எல்லைப் பகுதியான அட்டப்பாடியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கணவன்-மனைவியை தீயணைப்பு துறையினர் துரித வேகத்தில் செயல்பட்டு முதலுதவி அளித்து அவர்களது உயிரை காப்பாற்றி உள்ளனர். <br /><br />நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி ஆறு கேரளா மாநிலம் வழியாக சென்று மீண்டும் தமிழக பகுதிக்குள் வருகின்றது. கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள மாநிலத்தில் செல்லும் பவானி ஆற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் அட்டப்பாடி பகுதியில் உள்ள தாவளம் இடத்தில் உள்ள தரைப்பாலத்திற்கும் மேலாக சென்று கொண்டு இருக்கின்றது<br />
