Surprise Me!

சென்னை- சேலம் 8 வழிச் சாலை பற்றி பேசிய மன்சூர் அலிகான் கைது- வீடியோ

2018-06-18 1,541 Dailymotion

சென்னை சேலம் இடையேயான 8 வழிச் சாலை அமைந்தால் எட்டு பேரையாவது கொன்று சிறைக்கு செல்வேன் என சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக அதிகாலையில் நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுள்ளார். <br /> <br />சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர்அலிகான் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு வந்தார்.அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என்றார்.சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக மன்சூர் அலிகான் மீது சேலம் தீவட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு வந்த சேலம் போலீஸார், மன்சூர் அலிகானை அவரது விருகம்பாக்கம் இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.இதையடுத்து, அவரை சேலத்துக்கு அழைத்துச் சென்றனர். போலீசார் திடீரென வந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டதால் மன்சூர் அலிகானின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்

Buy Now on CodeCanyon