Surprise Me!

ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது திருமாவளவன் ஆவேசம்- வீடியோ

2018-07-05 992 Dailymotion

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம் அதற்காகத்தான் இத்தனை போராட்டம், ஆலையை திறப்பதை ஏற்க முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். <br /> <br />ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடகோரி போராடிய பொதுமக்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியாயான 13 பேருக்கும் வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்திரவிட்டதை ரத்து செய்யக்கோரி வேதாந்த நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது குறித்து கேட்டதற்கு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம் அதற்காகத்தான் இத்தனை போராட்டம் என்ற அவர், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதை ஏற்க முடியாது. கொள்ளப்புரம் வழியாக இந்த ஆலையை மத்திய, மாநில அரசுகள் மீண்டும் திறக்க முயற்ச்சிப்பது மீண்டும் மக்களை போராடும் நிலைக்கு தள்ளப்படும் என்றார். துப்பாக்கி சூடு குறித்து சிபிஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற அவர், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும். நள்ளிரவில் வி புகுந்து கைது செய்வதை காவல்துறை கைவிட வேண்டும் என தூத்துக்குடியில் திருமாவளவன் தெரிவித்தார்.

Buy Now on CodeCanyon