Surprise Me!

நியாய விலைக் கடையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த விற்பனையாளர்- வீடியோ

2018-07-13 2,442 Dailymotion

நியாவிலைக் கடையில் பொருட்கள் வாங்கச் சென்ற பெண்ணிடம் விற்பனையாளர் சில்மிஷம் செய்ததால் கிராமமக்கள் அவரை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். அப்போது பெண் ஒருவர் மண்ணெணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. <br /> <br />வேலூர் மாவட்டம் பெருங்கலுத்தூரில் செயல்ப்பட்டு வரும் நியாவிலைக் கடையில் விற்பணையாளராக செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார். அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ரேஷன் பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற போது அவரிடம் விற்பனையாளர் செல்வம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அப்பெண் கணவர் மற்றும் உறவினரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் ரேஷன் கடையில் செல்வத்தை சிறைப்பிடித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்க போலீசார் விரைந்து வந்து கிராமமக்களுடன் பேசி விற்பனையாளர் செல்வத்தை விடுவித்த போது திடீரென்று கூட்டத்திலி நின்றிருந்த அமுலு என்ற பெண் கையில் வைத்திருந்த மண்ணெணெய் உடல் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Buy Now on CodeCanyon