அரக்கோணம் ரயில் நிலையம் அருகே மீண்டும் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. உரிய நேரத்தில் ஊழியர் கவனித்து சிவப்பு கொடி காட்டி ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்கப்பட்டது.

வேலூர்மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே கடந்த வாரத்தில் இரண்டு இடங்களில் தண்டவாளத்தில் பழுது ஏற்பட்டு உரிய நேரத்தில் சீர் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சென்னை-காட்பாடி மார்கத்தில் உள்ள தண்டவாளத்தில் சென்ற மின்சார ரயிலில் பயணம் செய்த ரயில்வே ஊழியர் ஜெகதீஷ் தண்டவாளத்தில் ஒரு வித சத்தம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக ரயிலை விட்டு இறங்கி பார்த்த போது அதில் பெரிய அளவிலான விரிசல் உள்ளதை கண்டு பின்னால் வந்த சென்னை-மங்களூரூ வெஸ்ட்கோஸ்ட் விரைவு ரயிலை கண்டு மின்னல் வேகத்தில் ஓடி சென்று அங்கு இருந்த சிவப்பு கொடியை காண்பித்து ரயிலை நிறுத்தினார். பின்னர் இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்து சேதம் அடைந்த தண்டவாளத்தை தற்காலிகமாக சீர் செய்து ரயிலை அனுப்பி வைத்தனர் .உரிய நேரத்தில் செயல்பட்டு ரயிலை நிறுத்தி ஆயிரக்கனக்கான பயணிகளின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் ஜெகதீஷ்யை அனைவரும் பாராட்டினர்.

There was a crack in the track near Arakkonam railway station. At the right time the employee took care of the red flag and stopped the train due to the heavy disaster.