கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூரில் 3 கண்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் கட்டுக்கட்டாக பிடிப்பட்டது. இது தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் 3 கண்டெய்னர்களில் பிடிப்பட்ட 570 கோடி ரூபாய் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமானது என்று சிபிஐ நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. இது தொடர்பாக சிபிஐ உயர்நீதிமன்றத்தில் அறிக்கையும் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் சிபிஐ தாக்கல் செய்த நகலை வழங்கக்கோரி திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் சார்பில் வழக்கறிஞர் வில்சன், நீதிபதி சுப்பையா முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையீட்டு மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV