நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் 'செல்பி' கலாச்சாரம் வேகமாக மக்களிடையே பரவி பரவி வருகிறது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் கேமராக்கள், வீடியோ கேமராக்களுக்கு பதிலாக செல்போன்கள் மூலம் தாங்கள் கண்டு ரசிக்கும் காட்சிகளை படமாக்கி நினைவுகளாக்க முயலுகின்றனர். ஆனால் சிலர் பாலங்களில் ரெயிலில் செல்லும் போதும், ரெயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றபடியும் 'செல்பி' எடுக்கின்றனர். தண்டவாளத்தை கடக்கும்போது, ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட தற்போது, ரெயில் வரும்போது, தண்டவாளத்தின் அருகில் இருந்து 'செல்பி' எடுக்கும் போது அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க, ரெயில் நிலையங்கள், தண்டவாள பகுதி, ரெயில் நிலைய வளாகம், பிளாட்பாரங்கள், ரெயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து 'செல்பி' எடுப்பவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை கொட்டும் பயணிகளிடம் இருந்து 500 ரூபாய் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV