நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 2-வது அணு உலையில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி 2-வது அணு உலையில் நீராவி செல்லும் குழாயில் வால்வு பழுதானது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பழுதினை சரிசெய்யும் பணியில் இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், பராமரிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்ததையடுத்து, இரண்டாம் அணு உலையில் இன்றும் நாளையும் நீராவி வெளியேற்றும் சோதனை நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV