ஜம்மு காஷ்மீரில் இந்த வார தொடக்கத்தில் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் தீவிரவாத தாக்குதலால் சிரமற்றதன்மை நிலவி வருகிறது. அங்கு இதுவரை புதிதாக எந்த கூட்டணியும் அமையவில்லை. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு ஆளுநர் வோரா அழைப்பு விடுத்துள்ளார். காஷ்மீரில் அடுத்து நடக்க போகும் முக்கிய அரசியல் மாற்றங்கள் குறித்து அவர் இதில் பேச இருக்கிறார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அம்மாநில பாதுகாப்பு குறித்தும் இதில் பேசப்படும்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV