சிரிகுப்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். பாதுகாப்பு படையினர் அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே, காஷ்மீர், மற்றும் அனந்தநாக் பகுதியில் இணையதள சேவையை முடக்கப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV