தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து, விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி, அர்ஜூன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், விசாரணை ஆணையம் தொடர்பான அரசாணையில் மாற்றம் செய்ய முடியமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசாணையில் மாற்றம் செய்வது குறித்து தமிழக அரசு புதன் கிழமைக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV