Surprise Me!

8 வழி பசுமைச் சாலை - மக்களுடைய வாழ்வாதரம் பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டு வருகிறது

2018-07-17 0 Dailymotion

8 வழி பசுமைச் சாலை பொறுத்தமட்டில் மக்களுடைய வாழ்வாதரம் பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டு வருகிறது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மாணவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான சைபர் தொழில் நுட்பவியல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்படும் சைபர் குற்றங்களை தடுக்க மாணவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படுகிறது என்றும், அதிமுக மட்டுமே விவசாயிகளுக்கு ஆதராவாக செயல்படும் கட்சி என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், காவிரி விவகாரம் தொடர்பாக துரைமுருகனின் கேள்விக்கு யார் எந்த அமைச்சர் வேண்டுமானாலும் பதில் அளிக்கலாம் என்றார். நாங்கள் நினைத்தால் எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்க முடியும் என்ற ஸ்டாலின் கருத்து மூலம் அவரிடத்தில் கருப்பு பணம் உள்ளது என்பது தெளிவாகிறது என்றும் கூறியுள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon