Surprise Me!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - சென்னை உயர் நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் மனுத்தாக்கல்

2018-07-17 0 Dailymotion

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஐந்து வழக்குகள், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் மீதான 200க்கும் மேற்பட்ட வழக்குகளை உள்ளூர் போலீசாரே விசாரிப்பது, தவறானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு வழக்கில் சாட்சிகளாக இருப்பவர்கள் தான், மற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக உள்ளனர் எனவும், மாநில போலீசார் மீது குற்றம் சாட்டப்படுவதால் இந்த வழக்குகளை அவர்கள் விசாரித்தால் நியாயம் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon