தொடர் கைது நடவடிக்கையை கண்டித்தும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க கோரியும், தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போரட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பேசிய செய்தியாளர்களிடம் பேசிய திலக், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியான சோகத்தில் இருக்கும் போது, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் காவல்துறை வீடுகளில் அத்துமீறி நுழைந்து கைது செய்கிறார்கள் என்றும், காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றோம் என தெரிவித்தார். மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பத்தினருக்கு1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV