தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை வெளியேற்ற இன்னும் 2 நாட்கள் ஆகும் என்று, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த ஞாயிற்று கிழமை கந்தக அமில கசிவு வெளியேறியதை அடுத்து, தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு நடத்தியது. இதனையடுத்து, ஆலையில் இருந்து வெளியேறும் கந்தக அமிலத்தை அகற்ற மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி, இன்று 5 வது நாளாக கந்தக அமிலத்தை. கொள்கலனில் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 52 டேங்கர் லாரிகளில் ஆயிரத்து 110 டன் அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இந்த பணிகள் இன்னும் 2 நாட்களில் முடிவடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV