8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி, சேலத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை முற்றிலுமாக புறக்கணித்து விவசாயிகள் வெளியேறினர்.

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது 8 வழி பசுமை அழிப்பு சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று அனைத்து விவசாயிகளின் ஒருமித்த குரலாக ஒலித்தது. இந்த திட்டத்தை கைவிட்டு ஏற்கனவே உள்ள 4 வழிச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் ஆலோசனை வழங்கினர். இதனை தொர்ந்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV