அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்திற்கு ஆய்வு நடத்த வந்த ஆளுநருக்கு ஜனநாயக ரீதியாக கருப்புக் கொடி காட்டிய திமுக மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும், தொண்டர்களை கைது செய்து 15 நாட்கள் காவலில் வைத்து இருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். ஆரோக்கியமான ஜனநாயகத்தில் அரசியல் சட்ட அமைப்பின்படி செயல்படுவதுதான் ஒரு மாநிலத்தின் பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் ஆளுநருக்கு அழகு என்றும். ஆனால், கருத்து சுதந்திரத்தையும், அறவழிப் போராட்டங்களையும் அடக்கி ஒடுக்குவதற்கு மாநில அரசுக்கு உத்தரவிடுவது, ஆளுநருக்கு எவ்விதத்திலும் மதிப்பளிக்காது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை மிசா போன்ற நெருக்கடிகளையே சந்தித்த இயக்கம் என்று தெரிவித்துள்ள அவர் மாநில சுயாட்சிக் கொள்கையை வலியுறுத்தும் திமுக இது போன்ற கைதுகளுக்கு எல்லாம் அஞ்சி போராட்டத்தை கைவிடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV