காவிரி ஆணையம் உத்தரவு வரும் வரையில் தங்கள் விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்காமல் இருக்க முடியாது என கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில், KRS அணையில் இருந்து மாண்டியா மாவட்ட விவசாயிகளுக்காக பாசன கால்வாயில் நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம்124.8 அடியாகும். தற்போது, அணையின் நீர்மட்டம்104.5 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு ஏழாயிரத்து 776 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து மொத்தமாக வினாடிக்கு ஆயிரத்து 45 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், பாசன கால்வாயில் மட்டும் வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளுக்காக திறக்க வேண்டிய நீரானது மாண்டியா விவசாயிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV