ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட பணிகளை விரைந்து முடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிநீர் வாரியம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தில், நிலத்தடி நீரை அதிகரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும், வார்டுகள் மறுசீரமைப்பு செய்வது சிரமமான பணி என்று குறிப்பிட்ட அமைச்சர் வேலுமணி, இருப்பினும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, உள்ளாட்சி தேர்தல் நடைபெற வழிவகை செய்யப்படும் என கூறினா

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV