காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்கள் மற்றும், கர்நாடகாவின் பிரதிநிதியையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனுடன் சேர்த்து ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. இந்த ஆணையத்துக்கான உறுப்பினரை கர்நாடகா அரசு அறிவிக்காமல் இழுத்தடித்தது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்களை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹூசைன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். கர்நாடகா உறுப்பினரை அறிவிக்காததால் அம்மாநில நீர்வளத்துறை நிர்வாக செயலர், பகுதி நேர உறுப்பினராக இருப்பார் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா பிரதிநிதிகள் பகுதி நேர உறுப்பினர்களாக செயல்படுவார்கள். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்படும். இதேபோல் மத்திய நீர்வள ஆணைய பொறியாளர் நவீன் தலைமையில் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்காற்று குழுவில் தமிழக அதிகாரிகள் செந்தில், கிருஷ்ண உன்னி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கேரளாவின் ஜோஷி, புதுச்சேரியின் சண்முகசுந்தரம் ஆகியோரும் உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றனர். ஆனால் கர்நாடகா உறுப்பினர் இடம்பெறவில்லை. காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைமையகம் பெங்களூருவில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV