சீனாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள மம்தா பானர்ஜிக்கு கடந்த மார்ச் மாதம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அழைப்பு விடுத்தார். ஏப்ரல் மாதம் அழைப்பை ஏற்ற மம்தா பானர்ஜி கலந்துக்கொள்வதாக தெரிவித்தார். மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு குழு சீனாவுக்கு நேற்று இரவு பயணம் மேற்கொள்வதாக இருந்தது. இந்த குழு அங்கு நடைபெறும் இந்திய மற்றும் சீன அரசியல் தொடர்பான பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவருடைய பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மம்தா தனது முகநூலில், சீன பயணத்தில் எவ்வித பயனும் ஏற்பட போவதில்லை, எனவே கடைசி நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக தனது பயணத்தை ரத்து செய்கிறேன்'' என்று தெரிவித்து உள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV