Surprise Me!

கோவையில் முழுநேர குடிநீர் விநியோகம் தனியார்மயமானது

2018-07-17 0 Dailymotion

கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மேலும் மக்களின் பணம் எங்கே போகிறது என்ற கேள்வியும் முன்வைக்கின்றனர்.

கோவையில் 24 மணி நேர குடிநீர் விநியோகத்திற்கு, 2015ல் அரசு ஒதுக்கிய டெண்டரின் உயர்த்தப்பட்ட மதிப்பு 556.57 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது லண்டனை சேர்ந்த SUEZ என்ற தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. இந்த தனியார் நிறுவனம் அடுத்த 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை எடுத்து குடிநீர் விநியோகம் அளிக்க உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய குடிநீர் ஒப்பந்தமாக கருதப்படும் இந்த திட்டத்திற்காக, இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 3,000 கோடி ரூபாய்க்கும் மேல் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தமிழக அரசின் திட்ட அறிக்கையில் குடிநீர் திட்டத்திற்கான மதிப்பு 556 கோடி என்று குறிப்பிட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனத்திற்கு ரூபாய் 3,000 கோடிக்கு மேல் ஒப்பந்தம் வழங்கி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், மீதமுள்ள சுமார் 2,500 கோடி ரூபாய் எங்கே போனது என குழப்பம் எழுந்துள்ளதாக மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இந்த திட்டத்தில் ஊழல் உள்ளதா? இதற்கு யார் பொறுப்பு..? என கோவை மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்புயுள்ளனர்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon