திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆலோசனைக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் மாமூல் கொடுத்தே,இந்த ஆட்சி தக்க வைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊழல் குற்றச்சாட்டில் அவர்கள் சிறைக்கு செல்வது உறுதி என தெரிவித்தார். திமுக ஒருபோதும் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க விரும்பியதில்லை என்றும் கூறினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV