8 வழி பசுமை சாலைக்காக விலை நிலங்களை அளவீடு செய்தால் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வோம் என தருமபுரியில் மண்ணெண்ணை கேனுடன் விவசாயிகள் மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

சென்னை - சேலம் இடையே அமைய உள்ள 8 வழி பசுமை சாலைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த காளிபேட்டை கிராமத்தில் பசுமை சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தி அளவெடுக்கம் பணி நடைபெற்று வருகிறது. போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தின் உரிமையாளர்களுக்கு தெரியாமலே அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை போலீசார் மிரட்டி நிலங்களை அளவீடு செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் காளிபேட்டை கிராமத்தில் விலை நிலங்களை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மண்ணெண்ணை கேனுடன் அதிகாரிகள் முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பை மீறி நிலங்களை அளந்தால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என விவசாயிகள் மிரட்டல் விடுக்கின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV