ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் கிராமத்தில் நல்ராஜ் என்பவரிடம் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், சிறப்பு பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நாட்டு வெடிகுண்டுகளை மம்சாபுரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் 7 நாட்டு வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் போது திடீர் என நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் 5 காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடனர். மேலும் குண்டு வெடித்த மம்சாபுரம் காவல் நிலையத்தை மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன் பார்வையிட்டு விசாரனை நடத்தினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV