காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வரும் வரை காத்திருக்க முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜக, மஜத என எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் உச்சநீதிமன்றம்/நடுவர் மன்றம் என எந்தவிதமான சட்ட அமைப்பின் உத்தரவையும் மதிப்பதில்லை என சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், இத்தகைய அரசு பதவியில் நீடிக்க எந்த தகுதியுமில்லை என சாடியுள்ளார்.

மேலும், ஆணையத்தின் செயல்பாடுகளை முடக்கும் கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV