திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிகளுக்குட்பட்ட அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில், புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் . நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன் , எஜமானருக்கு நன்றியுள்ள பிராணியாக உள்ள நாய் எப்படியோ, அதுபோல ஜெயலலிதாவிற்கு நன்றியுள்ளவராக உடுமலை ராதாகிருஷ்ணன் இருந்ததால், வீட்டு வசதித்துறையை பெற்றார் என்றும், அதில் அவர் சிறப்பாக செயலாற்றி, தற்போது கால்நடை பராமரிப்புத்துறையிலும் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் கூறினார். இதனால், பொதுமேடையில் சக அமைச்சரை பிராணியோடு ஒப்பிட்டு பேசியதால், கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV