பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர்கள் விவசாயிகளை கொச்சைப்படுத்த கூடாது என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்துள்ளார். மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தை உடனடியாக கூட்டி, கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர் நிர்வாகத்தையும், தமிழகத்தின் மேட்டூர் அணையின் நீர் நிர்வாகத்தையும் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சியினரும் தான் சேர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தனர். ஆனால் பா.ஜ.கவை சார்ந்த தமிழிசைக்கோ, பொன்.ராதாகிருஷ்ணனுக்கோ விவசாயிகள் மீது அக்கறையும், ஆற்றலும் இல்லை என்று கூறினார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV