மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க,ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் அங்கு இந்தாண்டு இறுதிக்குள் மாநில சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கும் விதமாக பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலத்திற்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது முதற்கட்டமாக தலைநகர் போபாலில் உள்ள ராஜா போஜ் விமானநிலையம் வந்திறங்கும் அவர், ராஜ்கர் மாவட்டத்தில் 3ஆயிரத்து 866 கோடி ரூபாய் மதிப்புள்ள மோகன்புரா நீர்பாசன திட்டத்தை நாட்டுக்காக அர்பணிக்கிறார். இதன் பின்னர் இந்தூர் நகரில் சுத்ர சேவா என்ற நகர்புற போக்குவரத்து திட்டம் உட்பட, 278.26 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 வளர்ச்சிதிட்ட பணிகளை நாட்டுக்காக அர்ப்பணிக்கிறார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV