சென்னையில் கள்ளக்காதலை கண்டித்த அக்கா மற்றும் அக்காவின் கணவரை விஷம் வைத்து கொன்ற தங்கையை போலீசார் ஒன்றரை ஆண்டுக்கு பின் கைது செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் - மீனாட்சி தம்பதியினர். மீனாட்சியின் தங்கை மைதிலி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தர்மலிங்கமும், மீனாட்சியும், மைதிலியை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மைதிலி, பாலமுருகனின் உதவியுடன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் தர்மலிங்கம் மற்றும் மீனாட்சி இருவருக்கும் உணவில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார். இந்நிலையில் தர்மலிங்கத்தின் சகோதரர் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் மைதிலி மற்றும் பாலமுருகனை மைலாப்பூர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தர்மலிங்கம் மற்றும் மீனாட்சியை விஷம் வைத்து கொன்றது உறுதியானது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV