தமிழகத்தில், நெய்வேலி, ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கக் கோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், உதான் திட்டத்தின் கீழ் 2வது கட்டமாக ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். நெய்வேலி விமான நிலையத்தில் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், ஓசூர் விமான நிலையத்தை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டுவர சிவில் விமான போக்குவரத்து ஆணையத்துக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். மேலும், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற்றுத் தரவேண்டும் என்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு, முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV