Surprise Me!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12 ஆயிரம் கன அடியில் இருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

2018-07-17 0 Dailymotion

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12 ஆயிரம் கன அடியில் இருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வந்ததையடுத்து, கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தின் பல்வேறு அணைகள் நிரம்பி வருவதையடுத்து, கபினி அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12 ஆயிரத்து 500 கன அடியில் இருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதனடிப்படையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம், 50.68 அடியாகவும், நீர் இருப்பு 18.24 டி.எம்.சி.யாகவும் உள்ளது. மேலும், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் ஒகேனக்கலுக்கு 23 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon