காவிரி பிரச்சனை குறித்து நீதி மன்ற உத்தரவை மதிக்காத கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமியை கைது செய்ய வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அக்கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார், அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதி மன்ற உத்தரவை ஒரு வாரகாலத்திற்குள் பின்பற்ற தவறினால் கர்நாடக முதல்வர் குமாரசாமி மீது நீதி மன்றம் கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், வாய்பிருந்தால் அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV