தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 85 டேங்கர் லாரிகள் மூலம் 1500 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியேற்றப்படுள்ளது என்றும், இன்று இரவுக்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த 18ம் தேதி தொடங்கி 7 வது நாளாக கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி தொடர்கிறது என்றும், இதுவரை 85 டேங்கர் லாரிகள் மூலம் 1500 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் 5 டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், இந்த பணிகள் இன்று இரவுக்குள் நிறைவு பெறும் எனவும் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV