ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் பரப்புரைக் கூட்டத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அதிபர் எம்மர்சன் நூலிழையில் உயிர் தப்பினார்.

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் அதிபர் பதவிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுவதால் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் எம்மர்சன் நான்ககவா பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றபின், மேடையை விட்டு இறங்கும் போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டு வெடிப்பில் அதிபர் எம்மர்சன் நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். ஆனால் துணை அதிபர் கான்ஸ்டன்டைனோவும், அவரது மனைவியும் லேசான காயமடைந்துள்ளனர்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV