புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கான விடுதி, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் மருத்துவ மாணவர்களின் சேர்க்கைகான தரவரிசை பட்டியல் வரும் 28ம் தேதி வெளியிடப்படும் என்றும், அதை தொடர்ந்து ஜூலை 1ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் எனவும் தெரிவித்தார். வெளிமாநில மாணவர்களின் சேர்க்கை வெளிப்படையாகவும், மிகுந்த கண்காணிப்போடும் நடைபெறும் என்றும் தமிழகத்தில் 9 இடங்களில் புற்றுநோய் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக அதிநவீன கருவிகள் தலா 18 கோடி மதிப்பில் நிறுவப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV